பக்கங்கள்

செவ்வாய், 16 மார்ச், 2010

தமிழே !சொந்த மொருவரு மில்லை!
....சொல்லிடத் தகுவது மில்லை!
தந்த அழகினை உரைக்க
....தரையினில் உறவெனக் கில்லை!
எந்தன் மனத்தினை யாளும்
....இணையிலா மொழியென வாழும்
இந்தி ரவுலகும் போற்றி
....ஏத்திட விளைந்திடு தமிழே..!

சந்தச் சுவைமிகுந் தூறும்
....சந்தனக் கனிகளின் சாறும்
எந்தக் காலமும் ஆளும்
....எத்திசை நோக்கினும் வாழும்
நிந்தன் துணையொடு நானும்
....நித்தமும் வாழ்ந்திடல் வேண்டும்!
வந்தென் நாவினில் அமர்ந்து
....வழங்குக பாக்களைத் தாயே.!

--

4 கருத்துகள்:

Madurai Saravanan சொன்னது…

வாழ்த்துக்கள். அருள் கிடைக்கட்டும் .

தோழி சொன்னது…

நாவில் வந்து வழங்குகிறாள் என்பது புரிகிறது...

kanavugal சொன்னது…

அருமை... தமிழ் உங்களை போன்றவர்களால் செழிக்கட்டும்... வளர்க உமது தொண்டு...

அண்ணாமலை..!! சொன்னது…

மிக்க நன்றிகள் நண்பர்களே.!

கருத்துரையிடுக