பக்கங்கள்

செவ்வாய், 16 மார்ச், 2010

காதல்..!!காதல்..!!காதல்..!!காதல் - 1

காதல் கொண்டிடக் கண்களின் மணிகளுங்
கனவுக ளிறைத்தல்காண்!
காதல் கொண்டிடக் காண்பவை அழகுடன்
காட்சியாய்த் தெரியுங்காண்!
காதல் கொண்டிடக் கடினமும் எளிதெனக்
கருத்தினில் தோன்றுங்காண்!
காதல் கொண்டிடக் கனவுகள் கிளைத்திடக்
கதவுகள் திறக்குங்காண்!

காதல் - 2

காதல் கொண்டிடக் கவலைக ளொழிந்து
கதவுகள் திறக்காதோ!
காதல் கொண்டிடக் கதிரவ னொளியென
கண்களு மொளிராதோ!
காதல் கொண்டிடக் கருத்தினி லினிதெனக்
கவிகளும் முளைக்காதோ!
காதல் கொண்டிடக் கலகமும் தீர்ந்துபின்
கனவுகள் இனிக்காதோ!

4 கருத்துகள்:

திகழ் சொன்னது…

அருமை அண்ணாமலை அவர்களே

அண்ணாமலை..!! சொன்னது…

நன்றி திகழ் அவர்களே.!

மனோகரன் கிருட்ணன் சொன்னது…

நன்று. இனிய கவிதை. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்

அண்ணாமலை..!! சொன்னது…

மிக்க நன்றிகள் மனோகரன் கிருட்ணன்!

கருத்துரையிடுக