பக்கங்கள்

வியாழன், 1 ஏப்ரல், 2010

தமிழ்! தமிழ்! தமிழ்!


*
உறுபகை அழிதல் வேண்டின்
....ஊழ்வினை கழிதல் வேண்டின்
அறுமுகன் அருளும் வேண்டின்
....ஆனவை அருகில் வேண்டின்
வரும்பிணி யாவும் போயே
....வாழ்க்கையுஞ் செழிக்க வேண்டின்
கரும்புகை படிந்த நெஞ்சில்
....களங்கமில் ஒளியும் வேண்டின்..

மனத்தினில் தமிழை என்றும்
....மலையென வணங்கிப் போற்றி
வனப்பினில் உயர்ந்த தேனை
....வாய்தனில் உரைத்து வாழ்வில்
தினம்புரி செயல்கள் யாவுந்
....தீந்தமி ழாலே கூறி
அனல்மிகு தொல்லை போக்கி
....அருளுடை வாழ்வை வாழ்வீர்.!

நன்றி!

2 கருத்துகள்:

கவிதன் சொன்னது…

பூ மழையாய் பொழிகிறது உங்கள் தமிழ் கவிதை!!! அற்புதம் ...... வாழ்த்துக்கள் அண்ணாமலை!

அண்ணாமலை..!! சொன்னது…

மிக்க நன்றிகள் கவிதன்!

கருத்துரையிடுக