"
செந்தமிழ் செம்மொழியாய் ஆனபின்னும்
வந்த மொழி பேசுகின்றார் - வழக்கொழிந்து
எந்த வழி என்றுசொல் லாமற்போமோ..
எந்தை தாயுமெனக்குரைத்த அன்புமொழி..!!
இந்த புவி மீததனில் இன்பங்கொண்டே
அந்த நாள் தொட்டு நாமுரைத்து வந்தோம்..!!
கந்தலாய்ப் போன சிறு மொழிகளாலே
காலதேவன் கையிற்தமிழ் சிக்கிடுமோ..!!
வட்டம் விரிவாக வேண்டும் நமக்குள்ளேயே..!!
வாதிட்டு தமிழை வளமாக்கல் வேண்டும்..!!
பட்டம் நூறு பெறுவதனால் பயனுமில்லை..!!
பெற்ற தாய்க்கீடாய்ப் பிறபெண்கள் ஆவதில்லை..!!
நட்டநடு ஆற்றினிலே விட்டகொடியல்ல தமிழ்..!!
எட்டுமருங் கெங்குமிளங் காற்றாக உலவுந்தமிழ்..!!
கொட்டியிசை எழுப்பியெமை குதிகொள்ள வைக்குந்தமிழ்..!!
வெட்ட வெட்ட தமிழ்மாந்தர் நெஞ்சம்தனில் வளருந்தமிழ்..!!
"
அன்பன்.,
க.அண்ணாமலை..!!
..
திங்கள், 22 பிப்ரவரி, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
5 கருத்துகள்:
vazhukkal malai (Malai manasula manju)
மிக அருமையான கவிதை! வாழ்த்துக்கள்!
great attempt
இன்னும் ஒரு காளி தாசனை கண்டேன்....
நாவில் சரஸ்வதி நர்த்தனம் ஆடுகிறாள்.. அருமை..!!
மிக்க நன்றிகள் அனைவருக்கும்..!!
நாம் காளிதாசனின் தாசர்கள்..!!!ஆயினும்
ஆங்கிலத்தைக் குறைத்துத் தமிழ் பேச முயல்வதே..
தமிழுக்கு நாம் செய்யும் பெருந்தொண்டு..!!
கருத்துரையிடுக