பக்கங்கள்

வியாழன், 1 ஏப்ரல், 2010

இயற்கையின் இனிமை கேளீர் !


*
அன்ன மென்நடை காணோம்
....அச்சிறு பொட்டினைக் காணோம்.
சின்னக் கொடியிடை காணோம்.
....சேலைகள் எங்குமே காணோம்.
வன்னக் குழல்சடை தரிக்கும்
....வான்கரு மேகமுங் காணோம்
தின்னத் தின்னவே தெவிட்டாத்
....தீஞ்சுவைத் தமிழையுங் காணோம்!

மின்னும் பலவுடை பூட்டி
....மேலுடல் கீழுடல் காட்டி
நன்னும் தமிழ்உடை, செய்கை
....நடத்தையும் பேச்சையுந் தொலைத்தே
மன்னும் தமிழ்க்குடி அழித்தே
....மேலைநாட் டினரெனத் துடிப்பீர்
நன்றென் ஒருசொலைக் கேளீர்.
....நாடுக பண்புறு வாழ்வே!

முன்பந் நாட்களி லுரைத்த
....முன்னவர் மூடரு மல்லர்.
பின்ன வரிவரில் யாரும்
....பெரிதொரு அறிஞரு மல்லர்.
தென்ன வர்குடி நாளும்
....தழைத்திடத் தாங்கியே நிற்பீர்
அன்ன வர்வழி நடந்து
....அறத்தினைக் காத்திடப் புகுவீர்!
-

4 கருத்துகள்:

Unknown சொன்னது…

அருமைக் கவிதை அண்ணாமலை அவர்களே

அண்ணாமலை..!! சொன்னது…

மிக்க நன்றி பாலன் !
வருக!

கவிதன் சொன்னது…

உங்கள் தமிழ் புலமை வியப்பளிக்கிறது , மிக அருமை.... வாழ்த்துக்கள்!!!

அண்ணாமலை..!! சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கவிதன்! தொடர்ந்து வருக!

கருத்துரையிடுக