*
கடாரம் கொண்டான் ஒருவன்
...கலிங்கம் வென்றான் ஒருவன்
படாது பகையை விரட்டிப்
....பாரில் எங்குஞ் சென்றான்
விடாது தொழில்கள் செய்து
....விளக்காய்த் தமிழை வளர்த்தான்
தொடாது தொல்லை நீக்கி
....தோல்வி எனுஞ்சொல் போக்கி
இமயம் வரையில் சென்று
....எட்டுத் திக்கும் பரந்து
சமயம் தமிழாய்க் கொண்டு
....சாதி மதங்கள் துறந்து
கமலம் போலே மணந்த
....காலம் இனிமேல் வருமா?
இமையில் நனையும் கண்ணீர்
....இனிவி ழிப்பும் வருமா?
...கலிங்கம் வென்றான் ஒருவன்
படாது பகையை விரட்டிப்
....பாரில் எங்குஞ் சென்றான்
விடாது தொழில்கள் செய்து
....விளக்காய்த் தமிழை வளர்த்தான்
தொடாது தொல்லை நீக்கி
....தோல்வி எனுஞ்சொல் போக்கி
இமயம் வரையில் சென்று
....எட்டுத் திக்கும் பரந்து
சமயம் தமிழாய்க் கொண்டு
....சாதி மதங்கள் துறந்து
கமலம் போலே மணந்த
....காலம் இனிமேல் வருமா?
இமையில் நனையும் கண்ணீர்
....இனிவி ழிப்பும் வருமா?
-
5 கருத்துகள்:
தமிழனின் இன்றைய நிலைபற்றிய உங்கள் ஏக்கம் கவிதையில் தெரிந்தது. கவிதை அருமை நண்பரே!
முள்வேலிகளில் அடைபட்டுக்கிடக்கும் நம் வீரத்தமிழினத்தின் அவலநிலையை பிரதிபலிக்கும் உங்கள் கவிதை வலியைத்தருகிறது....
ஆம்! பாலன் & கவிதன்,
நம் உணர்வுகளில் தானே உள்ளன விதைகள்!
ஆயிரமுண்டெங்கு சாதி.
அந்நியர் புகலென்ன நீதி?
அவன் நாட்டுல தொழில் செய்ய
படங்காட்ட பணம் பண்ண
அனுமதிக்கிறானே!
அந்நியன்எமக்கு,சந்தை வழங்கும் தந்தை,
சொந்தத்தைவிட, சந்தைகள் தான்
பிழைக்கும் வழி.
ஆம்..!
பிழைக்கத் தெரிந்தவர்கள்.
உழைக்க மறந்தவர்கள்.
நன்றிகள்!
கருத்துரையிடுக