பக்கங்கள்

வெள்ளி, 23 ஏப்ரல், 2010

கல்தோன்றி மண்தோன்றா!


*
நல்லோர்க்கு மட்டுமிங்கே துன்பம் ஏனோ..
நாள்தோறும் வல்வினைகள் கொள்தல் ஏனோ..
வல்லோர்கள் எந்நாளும் வலுத்தல் ஏனோ..
வல்லூற்றால் குருவிகளும் சாதல் ஏனோ..
வலிமைகொள்ப வன்மட்டும் வாழ்தல் என்றால்
வாழவைக்கும் சாமியெல்லாம் உண்டோ இங்கே..
கலிமுற்றிப் போனதுவே காலம் வற்றி
கல்தோன்றா மூத்தகுடி கரைதல் காணீர்.!


நன்றி!

4 கருத்துகள்:

தோழி சொன்னது…

:( :(

அண்ணாமலை..!! சொன்னது…

நன்றிகள் தோழி..!

ஆதிரா சொன்னது…

இத்தனை ஏனோக்களுக்கும் பதில் தெரிந்து விட்டால்!!!வல்லூறுகள் தான் காரணம் என்று தாங்களே கூறி விட்டீர்கள்.. மெலியாரை வலியார் ஏய்க்கும் காலம் மாறும் என்று நம்பிக்கையில்...அருமையான கவிதைக்கு வாழ்த்துக்கள்..அ....லை

அண்ணாமலை..!! சொன்னது…

கண்டிப்பாக மாறும்..!!
ஆதிரா அவர்களுக்கு என்
வந்தனங்கள்!

கருத்துரையிடுக