பக்கங்கள்

செவ்வாய், 20 ஏப்ரல், 2010

இறை வழிபாடு!


*
உருவம் இன்றி உலகினிலே
....ஒத்து நடக்கும் செயல்களிலே
அருவம் போலே அமைவான்காண்
....அவனே தெய்வம் எனக்கொண்டான்
ஓரேர் உழவன் போலேயாம்
....ஒருவழி நெறியிற் செல்கையிலே
பாரேர் பிடித்து உழுதிடுவோன்
....பதராம் எமையுங் காப்பானே!

திருமால் அல்லா ஏசுவொடு
....திருப்பு கழ்பை பிள்குரானும்
அருகாய் வரட்டும் அனைவருமே
....அன்பால் எல்லாம் ஓர்கடவுள்
இரும்பால் ஆனது அல்லமனம்
....இருக்கும் அனைத்தும் நம்மதமாம்
உருவாக் கியவன் மனிதன்தான்
....உயர்வைப் பெறுதல் நம்மால்தான்!

நன்றி!

2 கருத்துகள்:

தோழி சொன்னது…

///அன்பால் எல்லாம் ஓர்கடவுள்///
உண்மை... அது புரியாதது தான் எல்லா குழப்பங்களுக்கும் மூலகாரணம்... அருமையான சிந்தனை...

அண்ணாமலை..!! சொன்னது…

மிக்க நன்றி தோழி!
அன்பே..அல்லா!இயேசு!சிவன்!எல்லாமும்!

கருத்துரையிடுக