பக்கங்கள்

புதன், 11 ஆகஸ்ட், 2010

தர்மம் என்றொரு தெய்வம்!

*
பாவ சூனியம் போக்கியே
பாவி நல்லவர் ஆக்கியே
தேவன் குன்றினில் சேர்த்திடும்
காவல் தெய்வமே தர்மமாம்!

தேடித் திண்ணலாம் யாவுமே!
மாடி வீட்டிலும் வாழலாம்!
வாடி நின்றிடும் போதிலே,
ஓடிச் செய்திடு நன்மைகள்!

வண்ண வண்ணமீன் வானிலே
சின்னக் கண்களால் நோக்கிடும்
எண்ணம் கூடியே தேங்கிடும்
வன்னம் காலையில் ஓடிடும்!

நீரின் கோலமே வாழ்க்கையாம்
பாரின் நாட்களும் கொஞ்சமாம்..
ஊரில் சிற்றிடம் வேண்டினால்
தேறு புண்ணியம் தேற்றிடு!

நன்றிகள்!

*இப்பா தேமா + கூவிளம் + கூவிளம் எனும்படி அமைந்த
வஞ்சிமண்டிலம் வகையைச் சார்ந்தது.

4 கருத்துகள்:

சிவகுமாரன் சொன்னது…

\\\நீரின் கோலமே வாழ்க்கையாம்
பாரின் நாட்களும் கொஞ்சமாம்.////

நிலையாமையை வெளிப்படுத்தும் வரிகள். அருமை

அண்ணாமலை..!! சொன்னது…

நன்றிகள் நண்பரே!

திகழ் சொன்னது…

/நீரின் கோலமே வாழ்க்கையாம்
பாரின் நாட்களும் கொஞ்சமாம்..
ஊரில் சிற்றிடம் வேண்டினால்
தேறு புண்ணியம் தேற்றிடு!

/

அருமை

அண்ணாமலை..!! சொன்னது…

மிக்க நன்றிகள்!

கருத்துரையிடுக